Thread started by aanaa on 1st March 2007 08:38 PM
suntv by AVM bringing PAASAM from Monday March 5 on sorkam time slot
so sorkam ending Tomorrow.
heard NIMMATHI by AVM also coming to end.
There is new serial called AYIRAM KANAVUKAL in JAYATV also
-
From: aanaa
on 14th October 2017 06:59 AM
[Full View]
கிங்ஸ் ஆப் டான்ஸ்: 7-ம் தேதி முதல் ஒளிபரப்பு
சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளை துவக்கி வைத்ததே விஜய் டி.வி. தான். இப்போது எல்லா சேனல்களும் ஏதோ ஒரு விதத்தில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதனால் விஜய் டி.வி நடன நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்த ஆரம்பித்திருக்கிறது.
வருகிற 7ந் தேதி முதல் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்ட செட்டுகளில் பிரமாண்ட நடன கலைஞர்களை கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் பிரமாண்ட அரங்கில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் நடத்துகிறார்.
இந்த நடன நிகழ்ச்சியில் உயிரை பணயம் வைத்தும் நடனமாடுகிறார்களாம். இதுவரை ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் இதுவே பிரமாண்டமாக இருக்கும் என்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 14th October 2017 07:01 AM
[Full View]
சின்னத்திரையில் ஒரு பாகுபலி: தமிழ் கடவுள் முருகன் பிரமாண்ட தொடக்கம்
சின்னத்திரை வரலாற்றின் புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது விஜய் டி.வியில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள தமிழ் கடவுள் முருகன் தொடர். பல லட்சம் செலவு செய்து பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்திருந்தனர். தமிழ் கடவுளின் கதை என்பதாலும், தங்களுக்கு தெரிந்த கதை என்பதாலும் நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தொடரை பலரும் பார்க்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தின் பிரமாண்டத்தை நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தது. நவீன தொழில் நுட்பத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்தி இருந்தார்கள்.
அசுர குலத்தை அழித்துவிட்டு கேளிக்கையில் விழுந்து கிடக்கிறான் இந்திரன். அரசுகுலத் தலைவனின் மகள் மீண்டும் அசுரகுலத்தை உருவாக்கி தேவர் குலத்தை அழிப்பேன் என்று தன் தந்தையின் பிணத்தின் முன் சபதம் கொள்கிறாள். அசுரகுலத்தின் குரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனையின் பேரில் காட்டில் கடும் தவம் புரியும் பிரமனின் மகன் பார்த்திபனை தன் அழகால் மயக்கி மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். நரகாசுரனும் அவரது சகோதர்களும், சகோதரி அஜிமுகியும் பிறக்கிறார்கள். அனைவரும் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து அற்புதமான வரங்களை பெறுகின்றனர்.
வரத்தை பெற்ற அசுரர்கள் தேவர் குலத்தை அழிக்கும் வேலையைத் துவங்குகிறார்கள். கண்ணில் பட்டவர்களை வெட்டி சாய்கிறார்கள். அடுத்து இந்திரலோகத்துக்கு படையெடுக்க திட்டமிடுகிறார்கள். நிலமை கட்டுக்கடங்காமல் செல்லவே சிவன் விழிப்படைகிறார். அரசுரர்களை அழிக்க அவர் ஒரு சக்தியை உருவாக்க நினைக்கிறார். இதோடு முதல் ஒரு மணி நேர எபிசோட் நிறைவடைந்தது. அவர் உருவாக்கும் சக்திதான் முருகன்.
குறைந்த விளம்பரங்களுடன் நேற்றைய எபிசோட் ஒளிபரப்பானது அனைவருக்கும் ஆச்யர்த்தை ஏற்படுத்தியது. தொடர்ந்த அப்படி ஒளிபரப்பாகுமா என்று சொல்ல முடியாது. திரைப்படங்களுக்கு முதல் ஓப்பனிங் கிடைப்பதை போன்று முதன் முறையாக ஒரு சீரியலுக்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்தது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 14th October 2017 07:02 AM
[Full View]
சின்னத்திரைக்கு திரும்பினார் பிரஜின்: சின்னத்தம்பியாக ரீ எண்ட்ரி
ஒரு காலத்தில் சின்னத்திரையில் நட்சத்திரமாக கலக்கியவர் பிரஜின். பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, காதலிக்க நேரமில்லை தொடர்களில் நடித்தார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.<p>அவ்வப்போது சிறிய கேரக்டர்களில் சினிமாவில் நடித்து வந்த பிரஜின் தீ குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பிறகு மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. சுமார் 10 வருடங்கள் சினிமாவில் போராடி விட்டு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் வருகிற அக்டோர் 2ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் சின்னத்தம்பி தொடரில் நாயகனும், சின்னத் தம்பியும் அவர்தான். ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கிராமத்து கதை. ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் சின்னத்தம்பி, பட்டணத்தில் இருந்து ஊருக்கு வரும் ஒரு திமிரான பெண்ணை எப்படி அடக்குகிறான் என்பதுதான் கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 14th October 2017 07:04 AM
[Full View]
மிசஸ்.சின்னத்திரை: விஜய் டி.வியில் புதிய நிகழ்ச்சி
தனது சேனலில் பணியாற்றும் தொகுப்பாளினிகள், தொடரில் நடிக்கும் நடிகைகளை வைத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விதவிதமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதில் விஜய் டி.வி. தனித்து நிற்கும். அந்த வரிசையில் அடுத்து வருகிறது மிசஸ்.சின்னத்திரை.
மிஸ்.இந்தியா, மிஸ் தென்னிந்தியா என்று தலைப்பில் அழகி போட்டிகள் நடத்துவது போன்று இது சின்னத்திரையில் நடிக்கும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திருமதிகளுக்கான அழகிப்போட்டி. ஆனால் இந்தப் போட்டியில் அழகு மட்டுமே பிரதானம் இல்லை. நடிப்பை தாண்டி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அதிகம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அவர்களுக்குள் இருக்கிற சமையல் திறன், ஒவிய திறன், நடனத் திறன், பாடும் திறன் இப்படி என்ன இருக்கிறதோ அதை வெளிப்படுத்தலாம். நடுவர்கள் அளிக்கும் மதிப்பெண். நேயர்கள் அளிக்கும் ஓட்டு ஆகியவற்றின் அடிப்படையில் மிசஸ்.சின்னத்திரை தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு லட்சக்கணக்கில் பரிசும் வழங்கப்பட இருக்கிறது. வருகிற 24ந் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமை தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தற்போது பிரமாண்ட அரங்கில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 14th October 2017 07:12 AM
[Full View]
-
From: aanaa
on 5th November 2017 03:46 AM
[Full View]
மீண்டும் ரேவதி
மண்வாசனை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரேவதி தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். 1990ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இரவில் ஒரு பகல் தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு பெண், ரேவதி, நிறங்கள் உள்பட பல சீரியல்களில் நடித்தார். சின்ன சின்ன ஆசை, பூம் பூம் சக்கலக்க, கதை கதையாம் காரணமாம், புதுமை பெண்கள், சிந்தனைகள், சேம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சில காலம் சின்னத்திரையிலிருந்து ஒதுங்கியிருந்த ரேவதி இப்போது மீண்டும் வந்திருக்கிறார். அழகு என்ற தொடரில் நடிக்க இருக்கிறார். ரேவதியின் கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்ப பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் அழகு என்ற கேரக்டரில் நடிக்கிறார் ரேவதி. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒஸ்தி, பவர் பாண்டி படங்களில் அம்மாவாக நடித்த ரேவதி தொடர்ந்து சினிமாவில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 5th November 2017 03:49 AM
[Full View]
பரமசிவனும், பார்வதியும் யார்?
http://img1.dinamalar.com/cini//CNew...2043631062.jpg
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் கடவுள் முருகன் தொடரில் தற்போதைய எபிசோட்களில் அதிகமாக வரும் பார்வதி, பரமசிவன் கேரக்டர்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கும், ஆனால் அவர்கள் யாரென்று தெரியாது. அவர்கள் இருவரும் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள் தான்.
பரமசிவன் கேரக்டரில் நடிப்பவர் வம்சம் தொடரில் வில்லனாக நடித்த நந்தகுமார். ஆறடி உயரமும், சிவன் கேரக்டருக்கேற்ற முகமும் அமைந்திருப்பதால் அவருக்கு இந்த கேரக்டர் கிடைத்திருக்கிறது. அவரும் சிறப்பாக நடித்து பெண்களின் ஆதரவை பெற்று வருகிறார்.
பார்வதியாக நடிப்பவர் பிரபல செய்தி வாசிப்பாளர் பிரியா. அமைதியே உருவான முகம், கனிவான தோற்றம் இவருக்கு பார்வதி கேரக்டரை பெற்றுத் தந்திருக்கிறது. சிறிது காலத்துக்கு செய்தி வாசிப்பை ஒதுக்கி வைத்து சினிமாவில் தலை காட்ட துவங்கி உள்ளார். சீரியல் முழுக்கவே செண்டிமெண்டாக தாய்மை உணர்வுடன் உருகி வருகிறார்.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 10th December 2017 06:27 AM
[Full View]
காமெடி கில்லாடிகள் : ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சி
ஜீ தமிழ் சேனல் தனது புதிய மாற்றத்திற்கு பிறகு பிரமாண்ட ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிகள், ஜூனியர் சூப்பர் ஸ்டார், சரிகமபா, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது காமெடி கில்லாடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கான ஆடிசன் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி நகரங்களில் நடந்தது. வருகிற 10ம் தேதி சென்னையில் நடக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 30 போட்டியாளர்களை கொண்டு நிகழ்ச்சியை படம்பிடிக்க இருக்கிறார்கள். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் காமெடிக்கான ஸ்கிரிப்டை தாங்களே உருவாக்கி கொள்ள வேண்டும் என்பது முக்கிமான அம்சமாகும்
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 10th December 2017 06:30 AM
[Full View]
மீண்டும் சின்னத்திரையில் தலைவாசல் விஜய்
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான தலைவாசல் விஜய், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நீலாமாலா தொடர் மூலம் சின்னத்திரை நடிகராக அறிமுகமானர். அதன்பிறகு கோபிகா, கங்கா யமுனா சரஸ்வதி தொடர்களில் நடித்தார். தலைவாசல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய், அன்று முதல் தலைவாசல் விஜய் ஆனார். அதன்பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்தார். யுகபுருஷன் என்ற மலையாளப் படத்தி ஸ்ரீ நாராயணகுருவாக நடித்து, சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது பெற்றார்.
http://img1.dinamalar.com/cini//CNew...3240002296.jpg
தலைவாசல் விஜய் தற்போது அழகு சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். இதில் அவர் பழனிச்சாமி வாத்தியாராக நடிக்கிறார். அவரது மனைவியாக ரேவதி நடிக்கிறார். 5 குழந்தைகளை கணவன், மனைவி இருவரும் எப்படி வளர்த்து ஆளாக்கி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னை என்ன என்பதான் கதை.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 10th December 2017 06:33 AM
[Full View]
ராஜ் டி.வியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு ஸ்பெஷல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு இது. இதையொட்டி பல நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ராஜ் தொலைக்காட்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.<br><br>திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு. அவரது சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகியவை பற்றி பேசுகிறது இந்த தொடர். அவர் சந்தித்த சோதனைகள், செய்த சாதனைகள் படக் காட்சிகளாக விரிகிறது. அரசியல் உலகில் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவர்கள். சினிமாவில் இணைந்து நடித்தவர்கள் ஆகியோரின் நேர்காணலும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.
http://img1.dinamalar.com/cini//CNew...0059330754.jpg
எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றை கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக ஒளிபரப்புகிறார்கள்
நன்றி: தினமலர்