Thread started by kirukan on 24th March 2008 04:29 PM
மனம் வெதும்பும் நேரம்
மரிக்கும் பூ சிரிப்பு
மௌனமாய் இருந்தே
மலரும் பூ வெறுப்பு
மகிழ்ச்சியை மங்கவைக்க
மிரட்டும் பூ மறுப்பு
மணவாழ்வில் நான்
பெற்ற பூ பொறுப்பு
விட்ட பூ எதிர்பார்ப்பு
கற்ற பூ பண்பு
கிடைக்காத பூ மதிப்பு
----
Kirukan
-
From: RR
on 13th January 2021 07:49 PM
[Full View]

Originally Posted by
kirukan
சந்தோஷந்தில் திளைத்திடும் நண்பர் கிறுக்கனே
வந்திடுமோ இனி கவிதைகள் நறுக்கென?!
-
From: kirukan
on 14th January 2021 03:47 PM
[Full View]

Originally Posted by
rr
சந்தோஷந்தில் திளைத்திடும் நண்பர் கிறுக்கனே
வந்திடுமோ இனி கவிதைகள் நறுக்கென?!
எனை மறந்து எழுதும் போதை கிறுக்கன் நான்..

என் சந்தோஷம் மேடத்தின் வருகையும் அவர்களால் உயிர்தெழுந்த கவிதைக்கு கவிதையும்...சரியான் போட்டி தொடருங்கள்...:-d
-
From: RR
on 14th January 2021 04:14 PM
[Full View]

Originally Posted by
kirukan
எனை மறந்து எழுதும் போதை கிறுக்கன் நான்..

என் சந்தோஷம் மேடத்தின் வருகையும் அவர்களால் உயிர்தெழுந்த கவிதைக்கு கவிதையும்...சரியான் போட்டி தொடருங்கள்...:-d
அப்போ.. சற்று மறந்திடுவீர் உம்மை
இணைந்திடுவீர் எம்முடன் :-d
-
From: kirukan
on 4th April 2021 07:01 PM
[Full View]
சார்ந்து வாழாத தம்பதி சேர்ந்து
வாழ்வதில் பயன் இல்லை.
-
கிறுக்கன்
-
From: kirukan
on 4th April 2021 07:01 PM
[Full View]
வீழ்த்தியவர் வியக்க வாழ்தல் மேன்மை
வீழ்த்த வாழ்தல் மடமை.
-
கிறுக்கன்
-
From: kirukan
on 4th April 2021 07:02 PM
[Full View]
பிறப்பது இறப்பதற்கே என்பது உறைக்கும்
தருணம் நல்லுறவின் மரணம்.
-
கிறுக்கன்
-
From: kirukan
on 4th April 2021 07:03 PM
[Full View]
நேர்மை பயணம் நெரிசல் இல்லாது
நிறைந்த நிம்மதி தரும்.
-
கிறுக்கன்
-
From: kirukan
on 4th April 2021 07:22 PM
[Full View]
மனதியங்க இன்பமும் துன்பமும் உருப்பெறும்
மனதுறங்க பேரானந்தம் நிலைபெறும்.
-
கிறுக்கன்
-
From: kirukan
on 18th April 2021 01:44 PM
[Full View]
மாற்றம் இல்லா மன்னிப்பு நம்மை
ஏமாற்றும் நல்ல நாடகமே.
-
கிறுக்கன்
-
From: pavalamani pragasam
on 18th April 2021 04:55 PM
[Full View]
சத்தியமான வாக்கு!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk